இதுதான் ஸ்டாலின்.. தமிழ்நாடு அரசு சபாஷ் ஏற்பாடு... அரசு பள்ளிகளில் இத்தனை சாதனையா.. ஹேப்பி அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.. இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் திருப்திகரமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு வருகிறது.
திமுக அரசு, பள்ளிக்கல்வித் துறைக்கு கூடுதல் கவனத்தை தந்து வருகிறது.. குறிப்பாக பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண் கல்வி உதவித் திட்டத்தை (புதுமைப் பெண் திட்டம்) அறிமுகப்படுத்தியது.. இந்த திட்டத்துக்கு பெரும் வரவேற்பு பரவலாக கிடைத்து வருகிறது.
புதுமைப்பெண்: தமிழக சமூகநலத் துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கி வைத்தார்.

அப்போது முதல்வர் பேசும்போது, "ஒரு நாடு செழித்து தன்னிறைவுடன் திகழ, நாட்டில் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பது அவசியம். அக்காலத்தில் மூடநம்பிக்கை காரணமாக முடக்கப்பட்டிருந்த பெண்களுக்கு உரிமைக் கதவை திறந்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். அவர் பிறந்தபோது, குடும்பம் மிகவும் வறுமையில் இருந்துள்ளது. அதனால், அவரது தாய், அவரை பத்து ரூபாய்க்கு விற்றுவிட்டார். பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட ராமாமிர்தம்அம்மையாரின் பெயரால், பல்லாயிரக்கணக்கான பெண் பிள்ளைகள் மாதம்தோறும் ரூ.1,000 பெறக்கூடிய அற்புதமான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று அறிவித்திருந்தார்.
சத்துணவு: இந்த திட்டத்தின்மூலம் 6 முதல் 12ம் வகுப்பு வரையில் அரசு பள்ளியில் படித்த மாணவிகள் தங்களின் இளநிலை, முதுநிலை படிப்புகளின்போது ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உதவித்தொகையாக பெற முடியும்... இதைதவிர, அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப் புத்தகங்கள், சத்துணவு, காலை சிற்றுண்டி, சைக்கிள், லேப்டாப், புத்தகப்பை, காலணி, வண்ணப் பென்சில்கள், கிரையான்ஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.
உள்கட்டமைப்பு: மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கணினி, ஆய்வகம், நூலகம் என அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் முறையில் பாடம் நடத்தும் அம்சங்கள் பரவலாக தொடங்கப்பட்டுள்ளன.. இப்படி அரசு பள்ளிகளின் தரமேம்பாட்டை, மாநில அரசு உயர்த்தியபடியே வருகிறது..
இந்நிலையில், தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. அதற்காக நடப்பாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.. கோடை விடுமுறையின் தொடக்கத்தில் இருந்தே விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றன.
கோரிக்கை: குறிப்பாக, "அரசு பள்ளிகளைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.. இதைத்தவிர, வீடு வீடாக சென்று அரசு பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பெற்றோர்களிடம் அறிவுரை வழங்கியும் வருகிறார்கள். தமிழக அரசின் திட்டங்களையும், அதன் பயன்பாடுகளையும் பெற்றோர்களிடம் எடுத்துரைத்து, அரசு பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்க கோரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது..
இந்த முயற்சிகளுக்கெல்லாம் நல்ல பலன் கிடைத்துவருவதாக அரசு தரப்பிலும் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது... ஏனெனில் அரசு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக காணப்படுகிறது. இதனால் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை என்பது புதிய உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயார் நிலை: இதனிடையே, ஜுன் 7ம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பிற்கான தயாரிப்பு பணிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன.. மற்றொருபுறம் பாடப் புத்தங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றும் வருகின்றன. அதுமட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய மூன்று கோடியே 56 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் அனுப்பப்பட்டு விட்டதாகவும், இலவச பாட புத்தகங்கள் மட்டுமின்றி 11 கல்வி உபகரணங்களையும் மாணவர்களுக்கு இலவசமாக தமிழக அரசு வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications