ஆக்ஷனில் இறங்கிய தமிழக அரசு..ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..விழுப்புரம் எஸ்பியாக சஷாங்க் சாய் நியமனம்
சென்னை: தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக சஷாங்க் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 புதிய டி.ஜி.பி.க்கள் பணி நியமனம் செய்யப்பட்டுளனர். ஆவடி போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்கிறார்.
*அருண்- சிவில் சப்ளை பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர் ஆவடி புதிய காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
*ஆல்பர்ட் ஜான்- சென்னை பூக்கடை துணை ஆணையராக பணியாற்றும் இவர் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*ஸ்ரேயா குப்தா- மாநில குற்ற ஆவணக் காப்பக கண்காணிப்பாளராக உள்ள இவர் சென்னை பூக்கடை துணை ஆணையராக நியமனம்.

*சீனிவாசன்- நெல்லை நகர துணை ஆணையராக (கிழக்கு) பணியில் உள்ள இவர் சென்னை நகர நிர்வாக பிரிவு துணை ஆணையராக நியமனம் .
*ஹர்ஷ் சிங்- சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் பொறுப்பில் இருந்து வரும் இவர் நாகப்பட்டினம் எஸ்.பியாக நியமனம்.
*ஜவஹர்- நாகப்பட்டினம் எஸ்.பியாக இருக்கும் இவர் ஈரோடு மாவட்ட எஸ்.பியாக நியமனம்.
*சசி மோகன்- ஈரோடு மாவட்ட எஸ்.பியான இவர் சென்னை கியூ பிரிவுக்கு சூப்பிரண்டாக நியமனம்.
* பி.சரவணன்- காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இவர் சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை ஆணையராக நியமனம்.
* ராஜேஷ் கண்ணன்- வேலூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த இவர் நாமக்கல் மாவட்டத்துக்கு எஸ்.பியாக நியமனம்.
*கலைச்செல்வன் - நாமக்கல் மாவட்ட எஸ்.பியான இவர் மாநில குற்ற ஆவணக் காப்பக சூப்பிரண்டாக நியமனம்.
* சரவணன்- ஆவடி ஆணையகரத்தில் செங்குன்றம் துணை ஆணையராக பணியில் உள்ள இவர் வேலூர் மாவட்ட எஸ்.பியாக நியமனம் .
*சாய் பிரனீத் - மதுரை நகர சட்டம் -ஒழுங்கு துணை ஆணையராக(தெற்கு) பணியாற்றும் இவர் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக நியமனம் .
*பிரதீப் - காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் இவர் மதுரை நகர சட்டம்-ஒழுங்கு(தெற்கு) துணை ஆணையராக நியமனம்.
*ஸ்ரீதேவி - திருச்சி தெற்கு துணை ஆணையராக பணியாற்றும் இவர் சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் பிரிவு கண்காணிப்பாளராக பணி நியமனம்.
*செல்வக்குமார் - தமிழ்நாடு கமாண்டோ பிரிவு சூப்பிரண்டான இவர் திருச்சி தெற்கு துணை ஆணையராக நியமனம்.
* பாலகிருஷ்ணன் - திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக பணியாற்றும் இவர் ஆவடி ஆணையகரத்தில் செங்குன்றம் துணை ஆணையராக நியமனம் .
* ராஜேந்திரன்- சென்னை அமைப்பு சார்ந்த குற்ற புலனாய்வு சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் சென்னை பாதுகாப்பு சி.ஐ.டி. பிரிவு(2) சூப்பிரண்டாக நியமனம்.
* சாமிநாதன் - சென்னை பாதுகாப்பு சி.ஐ.டி. பிரிவு(2) சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் திருப்பூர் மாவட்ட எஸ்.பியாக நியமனம்.

* சேஷாங் சாய்- திருப்பூர் மாவட்ட எஸ்.பியாக பணியில் உள்ள இவர் விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக நியமனம்.
*அருண் பாலகோபாலன்- சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் தமிழ்நாடு கமாண்டோ பிரிவுக்கு மாற்றம் .
* சரவணக்குமார்- மாநில உளவுப்பிரிவு தலைமையக கூடுதல் கண்காணிப்பாளராக உள்ள இவர் பதவி உயர்வு பெற்று லஞ்ச ஒழிப்பு பிரிவு தெற்கு சரக சூப்பிரண்டாக நியமனம் .
* வினோத் சாந்தாராம் - காஞ்சீபுரம் தலைமையக கூடுதல் கண்காணிப்பாளரான இவர் பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு(1) சூப்பிரண்டாக நியமனம்.
* கீதாஞ்லி- கரூர் மாவட்ட 'சைபர் கிரைம்' கூடுதல் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்று சென்னை 'சைபர் கிரைம்' துணை ஆணையராக நியமனம்.
* காமினி - தாம்பரம் ஆணையரகத்தில் தலைமையக கூடுதல் ஆணையராக பணியில் உள்ள இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.யாக மாற்றம்.
*ராதிகா- சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர் சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக மாற்றம்
* அன்பு- வடசென்னை கூடுதல் ஆணையராக பணியாற்றும் இவர் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக நியமனம்.
* லோகநாதன்- சென்னை தலைமையக கூடுதல் ஆணையநராக பணியாற்றும் இவர் வடசென்னை கூடுதல் ஆணையராக கூடுதல் பொறுப்பையும் கவனிப்பார்.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications