கல்வித்துறை உத்தரவு.. பிரதமர் மோடியின் ஹிந்தி உரையை கேட்க கட்டாயப்படுத்தப்பட்ட தமிழக மாணவர்கள்!

பிரதமர் மோடியின் ஹிந்தி உரையை கேட்க தமிழக மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உலக பொருளாதார மன்றத்தில் மோடி உரை -வீடியோ

    சென்னை: பிரதமர் மோடியின் ஹிந்தி உரையை கேட்க தமிழக மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர் தற்போது தேர்வு பயம் களைவது பற்றி ஹிந்தியில் உரையாடிக் கொண்டு இருக்கிறார்.

    இதற்கான சுற்றறிக்கை தமிழக கல்வித்துறையால் வழங்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து சரியான தகவல் தெரிவிக்கும்படி பள்ளி மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    இது மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மோடி இதில் முழுக்க முழுக்க ஹிந்தியில் பேசுகிறார்.

    மோடி புத்தகம்

    மோடி புத்தகம்

    பிரதமர் மோடி 'எக்ஸாம் வாரியார்' என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். மாணவர்கள் எப்படி தேர்விற்கு பயம் இல்லாமல் தயாராக வேண்டும் என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் தற்போது தேர்வு பயணம் குறித்து மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றி வருகிறார்.

    ஒளிபரப்பு

    ஒளிபரப்பு

    இந்த பேச்சை ஒளிபரப்ப சிறப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இணையம் , பள்ளிகளில் டிவி, தொலைக்காட்சியில் லைவ் ஒளிபரப்பு என்று நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பே இதற்கான முறையான அறிவிப்புகள் பள்ளிகளுக்கு சென்றுவிட்டது.

    பள்ளிக்கல்வித்துறை

    பள்ளிக்கல்வித்துறை

    அதேபோல் தமிழக பள்ளிக்கல்வித்துறையும் முக்கிய உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதன்படி மோடியின் உரையை மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும் என்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறதா என்று அறிக்கை அளிக்க வேண்டுமாம். அதேபோல பேசி முடித்த பின்பும் இதுகுறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும் என்றுள்ளார்கள்.

    முழுக்க முழுக்க ஹிந்தி

    முழுக்க முழுக்க ஹிந்தி

    ஆனால் இதில் மோடி முழுக்க முழுக்க ஹிந்தியில் பேசி இருக்கிறார். மாணவர்கள் ஹிந்தியில் மட்டுமே கேள்வி கேட்டு இருக்கிறார்கள். அந்த நிகழ்வில் தென்னிந்திய மாணவர்கள் யாரும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+