ரஜினியின் முகம் பார்க்க காலையில் இருந்து போயஸ் கார்டனில் காத்துக்கிடக்கும் ரசிகர்கள்!
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று அவரை சந்திப்பதற்காக அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்து உள்ளனர்.
Recommended Video

சென்னை : நடிகர் ரஜினியின் பிறந்தநாளான இன்று அவரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் இன்னமும் போயஸ் கார்டன் வீட்டின் முன் குவிந்து உள்ளார்கள்.
தமிழ் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறார். வழக்கமாக அவரது ஒவ்வொரு பிறந்த நாளிலும் தனது வீட்டிலோ அல்லது கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திலோ ரசிகர்களை ரஜினி சந்திப்பார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரஜினி பிறந்த நாள் அன்று ரசிகர்களை சந்திக்கவில்லை. மேலும், அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னதாக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை ரஜினி சந்தித்தார்.
அப்போது அரசியலுக்கு தான் வருவது குறித்து பதிலளித்த ரஜினி, போர்வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருந்தார். மேலும், சமீபத்தில் மந்த்ராலயம் சென்ற ரஜினி, தனது பிறந்தநாள் சமயத்தில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
அதனால், ரஜினி ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தனர். இந்நிலையில், பிறந்தநாளான இன்று அரசியல் கட்சி குறித்து அறிவிக்கப்போகிறார் என்கிற தகவல் பரவியதால் பல்வேறு ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் அவரது வீட்டிலும், திருமண மண்டபத்திலும் குவிந்தனர்.
காலையிலேயே ஏற்பட்ட கூட்டத்தால் கோடம்பாக்கம் , போயஸ் கார்டன் பகுதியில் போக்குவரத்து ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு போலீஸார் வந்து நிலைமையை சரி செய்தனர். இப்போது வரை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.
அரசியல் குறித்த அறிவிப்பு கூட இப்போது வேண்டாம், முகத்தை மட்டுமாவது காட்டுங்கள் தலைவா அதுவே போதும் என்று அனைத்து ரசிகர்களும் அவருக்காக ஏங்கி, காலை முதல் கால் கடுக்க நின்று கொண்டு இருக்கிறார்கள். மாலை ஆகியும் இதுவரை ரஜினி வந்து சந்திப்பதற்கான அறிகுறிகள் இல்லாத நிலையில், ரசிகர்கள் மனம் தளராமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், ரஜினி போயஸ் கார்டன் வீட்டில் இல்லை என்றும், கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications