சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
சேலம்: வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிமுகவுடன் கூட்டணியை தொடரும் என அக்கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஓமலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் மாவட்ட அலுவலக திறப்புவிழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், கடலூர், சென்னை, வேலூர் போன்ற பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. மழைநீரில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக அரசு சிறப்பாக செயலாற்றி மீட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. நீர்நிலைகளில் தான் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே நகர பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். மக்களுக்கான எங்களது போராட்டத்தில் நாங்கள் தாக்கப்பட்டோம். அந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது கட்சி அதிமுகவுடன் தான் கூட்டணியை தொடரும். நாங்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறோம், எந்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்ற தகவலை அ.தி.மு.க. தலைமைக்கு நாங்கள் முன்கூட்டியே தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications