அதிமுகவுடன் கூட்டணி தொடரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவிப்பு !
சென்னை: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கூட்டணி தொடரும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு இப்போதே அதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அரசியல் கட்சிகளை பொறுத்த வரையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்ற கூட்டணி கணக்கு பேச்சுவார்த்தை தற்போது மறைமுகமாக தொடங்கி உள்ளது. பிரதான கட்சியான திமுக நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் மூலம் ஏறத்தாழ அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை முடித்து விட்டது.
நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் பல்வேறு தரப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் அதிமுகவும் தனக்கே உரிய பாணியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது.
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணியை தொடர உள்ளதாகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்பார் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கும்படியும் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
நெடுஞ்சாலைகளில் நெரிசல் ஏன்? வளர்ச்சியா? வீழ்ச்சியா? தவாக வேல்முருகன் அழுத்தமான பதிவு -
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications