பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வான நடிகர் ரஜினிக்கு தமிழிசை வாழ்த்து !
சென்னை: பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது பல திறமையாளர்களுக்கும், சமூக அக்கறை கொண்டவர்களுக்கும், நல்ல கருத்துக்களை மக்களிடம் பதிய வைப்பவர்களுக்கும், கலையை நாள் தோறும் வளர்த்து கொண்டிருப்பவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக தமிழ் திரையுலகிற்கு பல்லாண்டு காலமாக கலை சேவை ஆற்றி வரும் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த விருது கிடைத்தமைக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நதிகள் இணைய வேண்டும். நாட்டின் வளம் பெருக வேண்டும் என்று மாபெரும் திட்டத்தை வாஜ்பாய் அறிவித்த போது ரஜினி சமூக அக்கறை ஒரு உதாரணம் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வான ரவிசங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழிசை இவ்வாறு தமிழிசை வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications