இப்பக் கூட இந்த வேடிக்கை விநோத விளையாட்டுக்கள் தேவைதானா??
அனிதா மரணத்தால் தமிழகமே அல்லோகல்லப்பட்டாலும் கூட எச். ராஜா தனது பார்வையை வேறு பக்கமாக திருப்பி வைத்துள்ளார்.
சென்னை: அனிதா தற்கொலைக்கு ஒரு கருத்தும் தெரிவிக்காமல் கமல் குறித்து தமிழிசையின் கருத்துக்கு வழிமொழிந்து அனிதாவெல்லாம் தனக்கு முக்கியமே இல்லை என்பதை மறைமுகமாக காட்டியுள்ளார் எச். ராஜா.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நாடே கொந்தளித்து பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர்.பாஜக தலைவர்கள் சார்பில் தமிழிசை மட்டும் நேற்று ரொம்பத் தாமதமாக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். மற்றவர்கள் வாயே திறக்காமல் உள்ளனர்.

சம்பிரதாயத்துக்காக...
அனிதாவின் மரணத்துக்கு பாஜக தலைவர்கள் ஒட்டுமொத்தமாக மெளனம் காத்து வருகின்றனர். சம்பிரதாயத்துக்காக தமிழிசை மட்டும் டிவிட்டரில் ஒரு கருத்தைப் போட்டு விட்டு அமைதியாகி விட்டார்.
|
அத்தோடு நின்றாரா
ஆனால் அதன் பிறகு கமல் பக்கம் போய் விட்டார் தமிழிசை. "என் நிறம் நிச்சயமாக காவியாக இருக்காது" - கமல் அதிரடி கருத்தது தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ளார் தமிழிசை.
|
கமல் பச்சோந்தியாம்
பச்சோந்திகளுக்கு நிறம் நிரந்தரமல்ல, அனைவரும் அறிந்ததே என்று கமலின் கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார் தமிழிசை.
|
வழிமொழிந்த ராஜா
சரியான பதிலடி. எல்லா விதத்திலும் இவர் பச்சோந்தி தான் என்று தமிழிசையின் கருத்தை வழிமொழிந்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

எரியும் நெருப்பில்...
அனிதாவின் மரணத்தால் தமிழகமே கொந்தளித்து வருகிறது. சின்னஞ்சிறு பெண் தற்கொலையால் மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் கமலுக்கு பதிலடி கொடுப்பதும், அதை ரீடிவீட் செய்து சபாஷ் போடுவதுமாக பாஜகவினர் கலக்கிக் கொண்டுள்ளனர். இப்பக் கூட இந்த வேடிக்கை விநோத விளையாட்டுக்கள் தேவைதானா என்று மக்கள் சுளிக்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications