ஏதோ இவர்கள் மட்டும்தான் வந்து அரசியல் செய்ய வேண்டும் என்று இல்லை.. கமல் பற்றி தமிழிசை சுளீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்ட நடிகர் கமல்- வீடியோ

  சென்னை: கமல்ஹாசன் இன்று எண்ணூர் துறை முகத்திற்கு சென்று ஆய்வு நடத்தியது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்தார்.

  சென்னை கமலாலயத்தில் இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தபோது, தமிழிசை கூறியதாவது:

  அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செய்யும். யார் மக்களுக்காக களத்தில் இறங்கினாலும் மகிழ்ச்சிதான். இன்றைய சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்பவர்களாக அவர்கள் இருக்கிறார்களா?

  Tamilisai says Kamal is not the only person in politics

  எண்ணூருக்கு போகட்டும், மக்களுக்காக ஏதாவது செய்யட்டும். களத்தில் இறங்கட்டும். சுற்றுப் பயணம் செய்யட்டும், மீனவ சமுதாயத்திற்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சியே. தங்களது பங்களிப்பையும் அளிக்கட்டும்.

  பார்க்கலாம், எப்படி அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை பார்க்கலாம். ஏற்கனவே தொடர்ந்து அரசியல் தலைவர்களும் மக்கள் நலனுக்காகத்தான் உழைத்துக் கொண்டுள்ளார்கள்.

  ஏதோ இவர்கள் மட்டும்தான் வந்து அரசியல் செய்துவிட முடியும் என்பது இல்லை. மக்கள் யாரை ஏற்றுக்கொண்டாலும் சந்தோஷம்தான். மக்கள் புத்திசாலிகள்தான், யாரை ஏற்றுக்கொள்ள வேண்டுமோ அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamilisai says Kamal is not the only person who is fight for people welfare.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற