காங்கிரஸ் ஜோதிமணி ஒரு விளம்பர பிரியர்.. தமிழிசை தாக்கு !
பா.ஜ.க. மீது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி வேண்டும் என்றே பொய் புகார் கூறுகிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி ஒரு விளம்பர பிரியர். தன்னுடைய பெயர் வர வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா மீது வேண்டும் என்றே பொய் புகார் கூறுகிறார் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜோதிமணி குறித்து சமூக வலைதளங்களில், கடந்த வாரம் சிலர் ஆபாசமாக பதிவிட்டனர். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதற்கு கண்டனம் தெரித்தனர்.

இதையடுத்து ஜோதிமணி கரூர் மாவட்ட எஸ்.பி.யிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தன்னை வாட்ஸ்-அப், பேஸ் புக்கில் ஆபாசமாக சித்தரித்து பாரதிய ஜனதா கட்சியினர் மிரட்டல் விடுப்பதாக கூறி இருந்தார்.
இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், ஜோதிமணி ஒரு விளம்பர பிரியர். தன்னுடைய பெயர் வர வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா மீது வேண்டும் என்றே பொய் புகார் கூறுகிறார். ஏற்கனவே அவர் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார். தன் பெயர் எப்போதும் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் எதையும் செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஜோதிமணி ஒரு விளம்பரப் பிரியர் என்றும் அவரைத் தரக்குறைவாகத் திட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணியின் துணைத் தலைவர் சூர்யா கூறியிருந்தார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications