முந்தைய பிறந்த நாட்கள் மக்களை மறந்த நாட்கள்.. கமலை சீண்டும் தமிழிசை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நடிகர் கமலஹாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவமுகாம்- வீடியோ

  சென்னை: முந்தைய பிறந்த நாள்கள் எல்லாம் மக்களை மறந்த நாள்களாகவே கொண்டாடப்பட்டன என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். இது முழுக்க முழுக்க கமலுக்கு கூறியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

  நடிகர் கமலின் 63-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் சென்னை தி.நகரில் மக்கள் பிரச்சினைகளுக்கான செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.

   Tamilisai Soundarrajan extends birthday wishes for Kamalhassan

  ஆவடியில் மருத்துவ முகாமை தொடக்கிவைத்து கனவுகளிலிருந்துதான் கண்டுபிடிப்புகள் உருவாகின என்று தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

  இந்நிலையில் கமல் எதை கூறினாலும் அதற்கு பதிலடி கொடுத்து வரும் தமிழிசை பிறந்த நாளான இன்றும் அவருக்கு வாழ்த்து கூறுகிறேன் என்ற பெயரில் விமர்சித்துள்ளார்.

  இதுகுறித்து டுவிட்டரில் தமிழிசை தன் பதிவில், இன்று மக்களுக்காக பிறந்தநாள் கொண்டாடுகிறவர்களின் முந்தைய பிறந்த நாட்கள் எல்லாம் மக்களை மறந்த நாட்களாகவே கொண்டாடப்பட்டன, என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

  இதில் கமலின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. அவரது டுவிட்டர் ஐடியையும் போடாமல் பொத்தாம் பொதுவாக வாழ்த்துகளை கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP State President Tamilisai extends her birthday wishes for Kamal hassan and she also says that last birthday functions are not for public interests.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற