குக்கர் நாட்டுக்கு தேவையில்லை.. வீட்டுக்குதான் தேவை.. சுப்ரீம்கோர்ட் தடைக்கு தமிழிசை வரவேற்பு
அரியலூர்: தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் தடை விதித்திருப்பத வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு விதித்த உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிடிவி தினகரன் அணிக்க\ ு வழங்கப்பட்ட குக்கர் சின்னத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்றார்.
குக்கர் வீட்டிற்கு தேவை, நாட்டிற்கு தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் காவிரி வாரியத்தின் பெயர் முக்கியமில்லை, நீர்தான் முக்கியம் என்று தமிழிசை கூறியுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!