ஆர்கே நகர் தொகுதியில் உள்ள வீடுகளில் ஏன் "குறியீடு" வைக்கிறாங்க.. தமிழிசை பரபர புகார்!
ஆர்கே நகர் தொகுதியில் உள்ள வீடுகளில் குறியீடுகள் எழுதப்படுவதாக தழிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் உள்ள வீடுகளில் குறியீடுகள் எழுதப்படுவதாக தழிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த குறியீடு என்ன அடையாளத்துக்காக எழுதப்படுகிறது என தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதியில் பணம் தண்ணியாக செலவு செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் இன்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது இதுவரை எங்கேயும் இல்லாத அளவுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பணப்பட்டுவாடா என பல முறைகேடுகள் நடைபெறுவதும் ஆர்.கே.நகரில் தான் என்று கூறிய அவர் ஆர்கே.நகர் பல ரெக்கார்ட் பிரேக்களை உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும் அதிமுகவின் இரு அணியினரும் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்றும் தமிழிசை குற்றம்சாட்டினார்.
மேலும் ஆர்கே நகரில் பல வீடுகளில் குறியீடு எழுதப்படுவதாக கூறிய தமிழிசை இது எதற்கான அடையாளம் என தெரியவில்லை என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications