For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணினி பாடத்தை தந்த கருணாநிதியின் இதயம் நின்று விட்டது.. கணினி ஆசிரியர்கள் இரங்கல்

கருணாநிதி மறைந்துள்ளதால் நமக்கென்று இருந்த ஒரு கடைசி நம்பிக்கையும் மறைந்தது என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதி மறைந்துள்ளதால் நமக்கென்று இருந்த ஒரு கடைசி நம்பிக்கையும் மறைந்தது என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் குமரேசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

Tamilnadu Computer Science Teachers Association condolence to Karunanidhi’s demise

"அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய அரசு மாணவர்களுக்கு கணினி கல்வி தந்தவர் கருணாநிதி. அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து மேல்நிலைப்பள்ளிகளில் 1994 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி.

அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் என எண்ணி அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினி அறிவியல் பாடத்திற்கு ஒளியேற்றி தந்தவர் இன்று உறங்குகின்றார்.

தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கருணாநிதியால் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலவச கணினி அறிவியல் கல்வி அளிக்கும் வகையில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

2011-12 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் மே மாதம் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் ஆட்சி மாற்றம் காரணமாக இன்று வரை கிடங்குகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால் பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை முடித்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு பகுதி நேர வேலை கூட கிடைக்கவில்லை.

பள்ளிக்கல்வி தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை சார்ந்த ஊழியர் சங்கங்கள், பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றக் கோரி, பள்ளிக்கல்வி துப்புரவுப் பணியாளர்கள், ஐந்தாம் நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அடிப்படை ஊதிய முரண்பாட்டை சரி செய்யக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்

இதே போல, ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர் சங்கத்தினர், முற்றுகை போராட்டம் துவங்கி உள்ளனர். இப்படியான சூழலில் திமுக தலைவர் கருணாநிதி மறைந்துள்ளதால், நமக்கென்று இருந்த ஒரு கடைசி நம்பிக்கையும் மறைந்தது. கருணாநிதியின் மறைவு கணினி ஆசிரியர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பேரிழப்பு. கணினி ஆசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரிய சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை குடும்பங்களுக்கும் மீட்க முடியாத இழப்பு.

கணினி ஆசிரியர்கள் சார்பாக பழம்பெரும் தலைவர் கருணாநிதி அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்" என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Tamilnadu Computer Science Teachers Association condolence to Karunanidhi’s demise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X