கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் கொடுக்க வேண்டும்: ரஜினிகாந்த்
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே (மெரினா) அடக்கம் செய்ய தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டில், "மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்துவிட்டு அடையாறு பகுதியில் இடம் ஒதுக்கியுள்ள நிலையில், ரஜினிகாந்த் ட்வீட் முக்கியத்துவம் பெறுகிறது.
மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை
— Rajinikanth (@rajinikanth) August 7, 2018


Click it and Unblock the Notifications
