For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுசு புதுசா பண்றாங்களே.. சென்னையில் “TN Talk” நிகழ்ச்சி! அப்டீன்னா என்ன? மிஸ் பண்ணிடாதீங்க..

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் ஆய்வாளர்கள் சர்வதேச மற்றும் அளவில் பல்துறை புகழ்பெற்ற அறிஞர்களின் நிபுணர்கள் உரையாற்றும் TN Talk என்ற நிகழ்ச்சி 4 வது முறையாக நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பள்ளிக்கல்வித் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் ஆய்வாளர்கள் சர்வதேச மற்றும் அளவில் பல்துறை புகழ்பெற்ற அறிஞர்களின் நிபுணர்கள், உரைகள் அறிவியல் மிகச்சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அரங்க அமைப்புடன் TN talk என்ற பெயரில் நிகழ்த்தப்படும்.

இணையம் வாயிலாக உலகெங்கும் உள்ள தமிழர்களைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்." என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டார். அதை தொடர்ந்து "TN Talk" (Tamil Nadu Talk) எனும் தொடர் நிகழ்ச்சிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

 Tamilnadu government coordinating 4th TN Talk event in Chennai Anna library

இதன் தொடர்ச்சியாக. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலை அரங்கில், நான்காவது "TN Tak" நிகழ்ச்சி, நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், மாலை 6 மணிக்கு ரமோன் மகசேசே விருது பெற்ற டாக்டர் பிரகாஷ் ஆம்தே மற்றும் டாக்டர் மந்தாகினி ஆம்தே ஆகியோர் பங்கேற்று, " Odyssey of Community Service: A Personal Reflection" என்ற தலைப்பில் உரையாற்றி பார்வையாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்தான். விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் www.youtube.com/ACLChennai என்ற யூடியூப் சேனலில் நேரலையிலும் ஒளிபரப்பப்படும். டாக்டர் பிரகாஷ் ஆம்தே ராமன் மகசேசே விருது பெற்றவரும் இந்தியாவின் நவீன காந்தி என்றும் அழைக்கப்படுபவருமான திரு பாபா ஆம்தேவின் மகன் ஆவார்.

மருத்துவர்களான டாக்டர் பிரகாஷ் ஆம்தே மற்றும் டாக்டர் மந்தாகினி ஆம்தே ஆகிய இருவரும் மகாராஷ்டிராவின் ஹேமல்காசா கிராமத்தில் உள்ள மக்களின் நலனிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். டாக்டர் பிரகாஷ் ஆம்தே 1973 இல் லோக் பிராதாரி பிரக்லாப் என்ற திட்டத்தைத் தொடங்கினார்,

இது மதுரா கோண்டில் இருந்து பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு உதவியது. பழங்குடியின மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் லோக் பிராதாரி பிரக்லாப் தவாகனாவை உருவாக்க அவரது திட்டம் வழிவகுத்தது. இளம் காட்டு விலங்குகளில் தாய் விலங்குகள் கிராம மக்களால் உணவுக்காக வேட்டையாடப்படுகிறது என்பதால், "அனிமல் ஆர்க்" என்றழைக்கப்படும் காட்டு விலங்குகளுக்காக ஒரு அனாதை இல்லத்தையும் டாக்டர் பிரகாஷ் ஆம்தே தொடங்கியுள்ளார்.

அவரது மனைவி டாக்டர். மந்தாகினி ஆம்தே தனது கணவரின் கனவுகளைப் பின்பற்ற அவருக்கு உதவி வருகிறார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் இந்த இருவரின்ன் உரையை கேட்கவும் கலந்துரையாடவும் வாசகர்களையும் பொதுமக்களையும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக இயக்ககம் அன்புடன் அழைக்கிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

English summary
The Government of Tamil Nadu has announced that TN Talk will be held for the 4th time in the Anna Centenary Library, where the researchers will address the experts of international and multidisciplinary renowned scholars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X