தமிழக அரசு லோக்பால் சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோத்தகிரி: தமிழக அரசு ஊழலை விசாரிக்க லோக்பால் சட்டம் உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு, மக்கள் பணத்தைக் கையாடும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தண்டிக்கும் லோக்பால் மசோதாவை 2011 ஆண்டு தாக்கல் செய்தது. ஆனால் இதுவரை அது சட்டமாக்கப்படவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழகத்தில் லோக்பால் கொண்டுவரப்பட வேண்டும் என கூறினார்.

 Tamilnadu government has to bring lokpal immediately said G.Ramakrishan

கோத்தகிரியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட ஜி.ராமகிருஷ்ணன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஒரு உயர்மட்டக் குழு அமைத்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என கூறினார்.

Communist Party G Ramakrishnan Speech-Oneindia Tamil

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏபரல் மாதம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களை கோத்தகிரி போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Marxist party state secretary G.Ramakrishnan told that Tamilnadu government has to bring lokpal immediately.
Please Wait while comments are loading...