இரு பெரும் அரசியல் ஜாம்பவான்களை இழந்தது தமிழகம் !
தமிழகம் இருபெரும் அரசியல் ஜாம்பவான்களை தமிழகம் இழந்துவிட்டது.
சென்னை: தமிழகம் இருபெரும் அரசியல் ஜாம்பவான்களை இழந்துவிட்டது வேதனையிலும் வேதனை.
தமிழகத்தில் எத்தனை பெரும் கட்சிகள் இருந்தாலும் அரசியல் கட்சிகள் என்றால் திமுக மற்றும் அதிமுக ஆகும். இவை இரண்டு மட்டுமே ஆட்சிக் கட்டிலில் மாறி மாறி அமரும்.
திமுகவின் தலைவராக கடந்த 50 ஆண்டுகளாக கருணாநிதி நீடித்து வந்தார். அது போல் அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவும் தன் பணியை செவ்வனே செய்து வந்தார்.

கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைப்பு
ஜெயலலிதா என்ற தலைவர் பெண்களுக்கே முன்னுதாரணமாக இருந்தவர். அவரை பார்த்து அரசியலுக்கு வந்த பெண்கள் ஏராளம். கட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்தார். பெண்களுக்கான நலத்திட்டங்களை செய்திருந்தார்.

ஜெ. மறைவு
தொடர்ந்து 2 முறை முதல்வராக வெற்றி பெற்ற ஜெயலலிதா கடந்த 2016-ஆம் அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா கடந்த 2016 -ஆம் ஆண்டு டிசம்பர் 5 -ஆம் தேதி மறைந்தார்.

காது கொடுத்து கேட்கும் தலைவர்
கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து இறுதி வரை போராடினார். அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார். தன் கட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

5 முறை முதல்வர்
திமுக தலைவர் கருணாநிதி 13 முறை எம்எல்ஏவாக இருந்தவர். அதுபோல் 5 முறை முதல்வராகவும் இருந்துள்ளார். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க தலைவராவார் கருணாநிதி. எம்ஜிஆர் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி இவர்களுள் இருந்த நட்பு அப்படியேதான் இருந்தது.

அரசியலில் இல்லாவிட்டாலும்
கடந்த இரு ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு காரணமாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் கருணாநிதி. கட்சியிலும் நேரடியாக அவர் ஈடுபடாவிட்டாலும் ஆலோசனைகளை மட்டும் வழங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று மாலை காலமானார்.

வெற்றிடம்
அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் ஆகியோருக்கு அடுத்து இரு பெரும் அரசியல் ஜாம்பவான்களாக இருந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான். தற்போது அவர்கள் இருவரும் இல்லாத நிலையில் தமிழகம் இரு பெரும் தலைவர்களை இழந்து தவிக்கிறது. இருவரது ஆட்சியிலும் சில குறைகள் இருந்தாலும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் தமிழக மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெறுவர் என்பதில் சந்தேகம் இல்லை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications