தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.
சென்னை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. மதுரையில் நேற்றிரவு கொட்டிய மழையால் மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது.

நிரம்பும் நீர்நிலைகள்
மாட்டுத்தாவணி உள்ளிட்ட இடங்களிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தொடர் மழையால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கனமழை பெய்ய வாய்ப்பு
இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய அரபிக்கடலை ஒட்டிய கேரள மற்றும் கர்நாடகா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் இரவில் வாய்ப்பு
இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சங்ககிரி துர்க்கத்தில் 11 செ மீ
கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக கடந்த 24 மணிநேரத்தில் சேலம் சங்ககிரி துர்க்கத்தில் 11 செ.மீ மழையும் திருச்செங்கோடு, வாழப்பாடி, ஈரோட்டில் தலா 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஓமலூர் மற்றும் பவானியில் தலா 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications