டெங்குவிற்கு 18 பேர் மட்டுமே பலி... மத்திய அரசிடம் தமிழக அரசு அறிக்கை!
டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் 18 பேர் மட்டுமே பலியாகியுள்ளதாக மத்திய அரசிடம் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை : டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக மத்திய அரசிடம் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு உயிரிழப்புகள் குறித்து மத்திய அரசட்ம அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பிற்கு அக்டோபர் 12 ம் தேதி வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12,324 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் 1178 பேரும், சென்னையில் 1136 பேரும், சங்கரன்கோயிலில் 1072 பேரும், கோவையில் 942 பேரும், திருப்பூரில் 784 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் 777 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சலுக்கு திருப்பூரில் 4 பேரும், ஈரோடு, சேலம், கோவையில் தலா 3 பேரும், கரூரில் 2 பேரும், திருச்சி, தர்மபுரி, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகியவற்றில் தலா ஒருவரும் பலியாகி உள்ளதாக மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ள தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 9ம் தேதி வரை 40 பேர் டெங்கு நோய்க்கு பலியாகியுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. மேலும் 11 ஆயிரத்து 700 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் 18 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக தமிழக அரசு குறிப்பிட்டு இருப்பது முன்னுக்குப் பின் முரணான தகவலாக உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications