இனி குடும்பத்தோடு ஐயப்பன் கோயிலுக்கு போவோம்.. தமிழக பெண்கள் இனிப்பு கொடுத்து தீர்ப்புக்கு வரவேற்பு
Recommended Video

சேலம்: சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் ஐயப்பன் கோயிலுக்கு அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை தமிழக பெண்கள் வரவேற்றுள்ளனர்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இதில் பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா தவிர மற்ற நான்கு நீதிபதிகளும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து தீர்ப்பை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு தமிழக பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சேலம் மாநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெண்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார்.
இது குறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தீர்ப்பால் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் கருவறைக்குள்ளேயே பெண்கள் சென்று அம்மனுக்கு அனைத்து பூஜைகளும் செய்கிறார்கள். இயல்பிலேயே பக்தி உணர்வு மிக்கவர்கள் பெண்கள்.
[வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு.. சபரிமலையில் அனைத்துப் பெண்களும் வழிபட சுப்ரீம்கோர்ட் அனுமதி!]
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்போம். கடவுள் வழிபாட்டை நாங்கள் தான் அதிகம் மேற்கொள்வோம். எனது சிறுவயதில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் சென்று வழிபட வேண்டும் என்ற ஆசை உண்டு.
எங்களுக்கு இருந்த இந்த விருப்பத்தை உச்சநீதிமன்றம் நிறைவேற்றியுள்ளது. கணவரும், குழந்தைகளும் மட்டும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் போது எங்களால் போக முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இப்போது குடும்பத்தோடு, கோவிலுக்கு செல்லலாம் என்று எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது, திருப்தியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications