தமிழர்கள் தீவிரவாதிகள், நன்றிகெட்டவர்கள், திருடர்கள், நாகரீகமற்றவர்கள்.. விடாமல் "சீண்டும்" பாஜக!
சென்னை: தமிழ்நாட்டு மக்களை கடந்த பல ஆண்டுகளாகவே பாஜக தொடர்ந்து இழிவுபடுத்தியும் அவதூறாகவும் பேசிவருவதும் இதற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருவதும் தொடர்ந்து வருகிறது. பாஜகவின் இந்த இழிவு விமர்சனங்களின் உச்சமாகத்தான் தமிழக எம்பிக்களை நாகரீகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்திருப்பதாகும். தமிழ்நாட்டு எம்பிக்களை நாகரீகமற்றவர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் விமர்சித்து எதிர்ப்புகளை சந்தித்து பின்னர் வாபஸ் பெற்றுக் கொண்டார். ஆனாலும் தர்மேந்திர பிரதானின் இந்த விமர்சனம், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தர்மேந்திர பிரதான் விமர்சனம் மீதான விவாதங்கள் தொடருகின்றன.

பாஜக தலைவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களை இப்படித்தான் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். இந்த இழிவான விமர்சனங்களில் சிலவற்றின் தொகுப்பு:
- தமிழர்கள் நன்றி மறந்தவர்கள்; தமிழை பிரதமர் மோடி புகழ்ந்த போது அதை கொண்டாட மறந்தவர்கள்- முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
- தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் கர்நாடகாவுக்கு வந்து வெடிகுண்டு வைக்கின்றனர்- மத்திய அமைச்ச ஷோபா
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிஷாவை ஆட்சி செய்வதா? தமிழ்நாட்டுப் பாண்டியனை ஒருபோதும் நாங்கள் ஏற்கவும் முடியாது; பொறுத்துக் கொள்ளவும் முடியாது- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
- ஒடிஷாவின் பூரி ஜெகநாதர் கோவில் புதையல் சாவியை தமிழ்நாட்டுக்கு கொண்டு போய்விட்டனர் (தமிழர்கள் திருடர்கள்) - பிரதமர் நரேந்திர மோடி
- தமிழ்நாட்டு எம்பிக்கள் அராஜகவாதிகள்; நாகரிகமற்றவர்கள் - நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
- தமிழ் மொழி பழமையானதுதான்; அதனை விட மூத்த மொழி சமஸ்கிருதம்தான் -நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே
- திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து தமிழரை இந்துவாக்க தொடர்ந்து பாஜக தலைவர்கள் முயற்சி உள்ளிட்டவைகளைப் பட்டியலிடுகின்றனர் திமுகவினர்.
-
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள்












Click it and Unblock the Notifications