For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 நாள் தொடர் விடுமுறை எதிரொலி – டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க புதிய இலக்கு

Google Oneindia Tamil News

நெல்லை: பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் மது விற்பனை ரூபாய் 400 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை இருக்கிறது. இதனால் இந்த நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 65 கோடி முதல் ரூபாய் 70 கோடி அளவுக்கு மது விற்பனை இருக்கும்.

விடுமுறை நாட்களில் இந்த அளவு சுமார் ரூபாய் 5 கோடியில் இருந்து ரூபாய் 10 கோடியாக உயரும். பண்டிகை நாட்களில் மேலும் உயர்ந்து ரூபாய் 100 கோடி வரை செல்லும். கடந்த 2 ஆண்டுகளாக டாஸ்மாக் பார்களில் அதிக அளவில் போலி மது விற்பனை செய்யப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன.

Target fixed for TASMAC sales increase…

இதனால் டாஸமாக் மது விற்பனை குறைய தொடங்கியது. பண்டிகை நாட்களில் ஒரு மடங்கு கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபானங்களின் அளவு 50 சதவீதமாக குறைந்தது.

கடந்த தீபாவளியின் போதும், புத்தாண்டு கொண்டாடத்தின் போதும் கடந்த ஆண்டை விட பாதிஅளவுக்குதான் விற்பனை இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள், கலால் உயர் அதிகாரிகள், போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

பல்வேறு இடங்களில் போலி மதுபான தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையை சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலி மதுபான விற்பனையை கட்டுபடுத்தும் பொருட்டு போலீசார் மறறும் கலால் பிரிவினர் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே விற்பனையைக்கு தேவையான சரக்குகளை டாஸ்மாக் கடைகளில் நிரப்பப்பட்டுள்ளது. இன்று காணும் பொங்கல் என்பதால் டாஸ்மாக் விற்பனை கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த 5 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக ரூபாய் 400 கோடி அளவுக்கு டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.

English summary
TASMAC margined the sale to 400 crore due to 5 days continues holiday in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X