டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டும் மண்டல அலுவலர் - நெல்லை கலெக்டரிடம் புகார்
டாஸ்மாக் ஊழியர்களை மண்டல அலுவலர் மிரட்டி வருவதாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் என மண்டல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நெல்லை: டாஸ்மாக் ஊழியர்கள் எந்த முறைகேடும் செய்யாத போதே முறைகேடு செய்தது போல் மண்டல அலுவலர் கையெழுத்து வாங்கி சென்றதாக ஊழியர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் டாஸ்மாக் கடையில் மதுரை மண்டல டாஸ்மாக் பறக்கும் படை அதிகாரி சிவசங்கரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பண கையிருப்பு குறைவு ஏற்பட்டதை அடுத்து ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து ஊழியர்கள் அந்த பணத்தை செலுத்தியுள்ளனர். இதற்கிடையே அதே பறக்கும்படை அதிகாரி சென்று விட்டு 1 மணி நேரம் கழித்து மீ்ண்டும் வந்துள்ளார். ஆய்வில் எந்தவித முறைகேடும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் ஊழியர்களை மிரட்டி எந்த ஒரு முறைகேடும் நடக்காத கடை மீது பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி விற்பனையாளர்களாகிய நாங்கள் முறைகேடு செய்தது போல் அவர் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணிக்கு பாதுகாப்பு வேண்டும். சட்ட விரோத செயலில் ஈடுபட்ட பறக்கும் படை அலுவலர் சங்கரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட மேலாளர் ஐயப்பன் என்பவர் கூறுகையில், "ஊழியர்கள் அனுப்பிய புகார் மனு எனக்கும் வந்துள்ளது. கடந்த சில தினங்களாக சென்னை மாநில அலுவலகத்திற்கு மீட்டிங்கு சென்றதால் விசாரிக்க முடியவில்லை. இதுகுறித்து இன்று விசாரணை நடத்தப்படும்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications