முதல் முறையாக 'டாஸ்மாக்' கடைகளை 4 நாட்கள் மூட தமிழக அரசு உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக இம்மாதத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

நபிகள் நாயகம் பிறந்த நாள் ஜனவரி 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), திருவள்ளுவர் தினம் ஜனவரி 15-ந்தேதி (புதன்கிழமை), வள்ளலார் நினைவுதினம் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் குடியரசு தினம் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எப்.எல்.2, உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.3, உரிமம் கொண்ட ஹோட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் ஏதும் விற்பனை செய்யப்படமாட்டாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications