திருவிடைமருதூரில் இளம் ஆசிரியை நடு ரோட்டில் வெட்டிக் கொலை
Recommended Video

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் ஆசிரியை ஒருவர் நடு ரோட்டில் வைத்து குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவிடைமருதூர், உமாமகேஸ்வரபுரம் சாலையில் பாபநாசத்தை சேர்ந்த வசந்தப்ரியா (வயது 25) என்ற ஆசிரியை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த திருவிடை மருதூர் போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
என்ன காரணத்திற்காக இந்த கொலை நடந்தது என்று தெரியவில்லை. சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆசிரியையின் செல்போனை வைத்து விசாரணை தொடங்கியுள்ளது. நடு ரோட்டில் நடந்த இந்தக் கொலையால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications