திருவண்ணாமலையில் 19 வயது பெண் கொலை: பலாத்காரம் செய்து கொலையா?
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இளம்பெண் ஒருவர் கல்லால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த பெரணமல்லூர் அருகில் இருக்கும் மகாதேவிமங்கலத்தை சேர்ந்தவர் ரத்தினம். மோசவாடி கூட்டுறவு சங்க இயக்குனர். அவர் தம்பி ஏழுமலையின் மகள் சுகுணா(19). ஏழுமலை இறந்துவிட்டார். அதனால் அவரது மனைவி விஜயாவும், மகள் சுகுணாவும் கூலி வேலை செய்து பிழைத்து வந்தனர்.
இந்நிலையில் சுகுணா வீட்டுக்கு பின்பக்கம் உள்ள முட்புதரில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தலையில் யாரோ கல்லால் தாக்கியுள்ளனர். மேலும் அவரது உடல் முழுவதும் நகக் கீறல்கள் இருந்தன. இதனால் அவரை யாராவது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் அல்லது பலாத்காரத்தை எதிர்த்தபோது கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீசார் சுகுணாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications