தென்காசியில் இன்று முதல் செப்.2 வரை 144 தடை..ஆட்சியர் உத்தரவிட்ட காரணம் என்ன தெரியுமா?
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Recommended Video
தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஒண்டிவீரன் வீர வணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டெம்பர் 1ஆம் தேதி மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவை கொண்டாடப்பட உள்ளன. இந்நிலையில், இன்று காலை 6 மணி தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி மாலை 6 மணி வரை 15 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் 20ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தென்காசி மாவட்டம் முழுவதும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 2ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளியுடன் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தற்போது குற்றால சீசன் காரணமாக மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், இம்மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications