செங்கோட்டை நீதிமன்றத்தில் தென்காசி கிருத்திகா ஆஜர்.. மூடிய அறையில் நீதிபதிகளிடம் வாக்குமூலம்

தென்காசியில் இளம்பெண் கிருத்திகா கடத்தல் விவகாரத்தில் பூட்டிய அறையில் வாக்குமூலம் பெற்ற நீதிபதிகள்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசியில் இளம்பெண் கடத்தல் விவகாரத்தில் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த கிருத்திகாவை செங்கோட்டை நீதிமன்றத்தில் இன்று போலீஸார் ஆஜர்படுத்தினர்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பனின் மகன் வினித். இவர் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல். இவர் தென்காசி பகுதியில் 20 ஆண்டுகளாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகா. இவர் வினித் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இந்த நிலையில் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெண் வீட்டார், வினித்தை தாக்கிவிட்டு கிருத்திகாவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர்.

டிரென்ட்டான வீடியோ

டிரென்ட்டான வீடியோ

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கிருத்திகா பெற்றோர் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். அத்துடன் கிருத்திகாவை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருத்திகா வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் தன்னை யாரும் கடத்தவில்லை.

வேறு நபருடன் திருமணம்

வேறு நபருடன் திருமணம்

தான் உறவுக்கார நபரை திருமணம் செய்து கொண்டேன் என கூறியிருந்தார். இந்த வீடியோவும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் கிருத்திகாவை மீட்டுத் தர கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வினித் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது கிருத்திகாவை மீட்க தனிப்படை போலீஸார் குஜராத் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

செல்போன் ஆடியோ

செல்போன் ஆடியோ

இந்த நிலையில் கிருத்திகாவும் வினித்தும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது போன்ற ஒரு ஆடியோ வினித்தின் வழக்கறிஞர் மூலம் வெளியிடப்பட்டது. அதில் கிருத்திகா கூறுகையில் நான் யாருடைய மிரட்டலுக்கும் ஆளாகவில்லை. எனது வாழ்க்கையையும் உனது வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனவே நீ கொடுத்த கேஸை வாபஸ் பெற்றுக் கொள். தேவையில்லாமல் உன் குடும்பத்தினரும் என் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சினை முடியும் என நினைத்தேன். ஆனால் தொடர்ந்து கொண்டே போகிறது என பேசியுள்ளார்.

நேராக வந்து சொல்ல கூறிய வினித்

நேராக வந்து சொல்ல கூறிய வினித்

இதற்கு வினித், நீ சொல்ல வேண்டிய விஷயத்தை நேரடியாக வந்து சொல், வழக்கை நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என பதில் அளிப்பது போல் இருந்தது. இந்த ஆடியோவும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கிருத்திகா கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. இதில் கிருத்திகாவை செங்கோட்டை நீதிமன்றத்தில் போலீஸார் 2 தினங்களுக்கு முன்னர் ஆஜர்படுத்தினர்.

கிருத்திகா

கிருத்திகா

அப்போது கடத்தப்பட்டது குறித்து கிருத்திகாவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் சற்று குழப்பத்தில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை தென்காசி அருகே நன்னாகரம் பகுதியில் உள்ள காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி 2 நாட்களுக்கு பிறகு ஒப்புதல் வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

பூட்டிய அறையில் வாக்குமூலம்

பூட்டிய அறையில் வாக்குமூலம்

இந்த நிலையில் 3 நாட்கள் தற்போது ஆகியுள்ள சூழலில் இன்று செங்கோட்டை நீதிமன்ற நீதித் துறை நடுவர் சுனில்ராஜ் முன்னிலையில் கிருத்திகாவை போலீஸார் ஆஜர்படுத்தினர். மதியம் 1 மணிக்கு சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையிலான போலீஸார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற அறையில் வைத்து கிருத்திகாவிடம் செங்கோட்டை நீதித் துறை நடுவர் சுனில்ராஜா ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்று வருகிறார். அதற்கு முன்பாக நீதிமன்றத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு பாதுகாப்புக்காக சென்ற போலீஸாரும் வெளியேற்றப்பட்டனர். எனவே நீதிபதிகளிடம் கிருத்திகா என்ன சொன்னார் என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+