For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்ததுமே வேலையை ஆரம்பித்த தென்காசி மா.செ.. 26 சென்ட் ரெடி.. ‘உதயநிதியை அழைத்து’.. ஓஹோ.. பிரமாண்டம்!

Google Oneindia Tamil News

தென்காசி : தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் பதவி கிடைத்ததுமே, உற்சாகமாக வேலைகளில் இறங்கியுள்ள சிவபத்மநாதன், அம்மாவட்ட உடன்பிறப்புகளுக்கு ஸ்வீட் நியூஸ் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் திமுக மாவட்ட கழகத் தேர்தல் நடைபெற்றது. 72 கழக மாவட்டங்களுக்கும் நடைபெற்ற தேர்தலையடுத்து நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டது திமுக தலைமை. தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு மட்டும் நிர்வாகிகள் பட்டியல் நிறுத்திவைக்கப்பட்டது.

திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, அவரவர் பகுதியில் உற்சாக வரவேற்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள சிவபத்மநாதன், பொறுப்பேற்ற கையோடு, தென்காசியில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கு இடம் பதிவு செய்துள்ளார். அடிக்கல் நாட்ட உதயநிதியை அழைக்கவும் முடிவு செய்துள்ளார்.

நீதிமன்றம் இருக்கட்டும்.. இப்ப 'பந்து’ அப்பாவு கோர்ட்டில்.. திமுக பிளான் என்ன? நெருங்கும் ரிசல்ட்! நீதிமன்றம் இருக்கட்டும்.. இப்ப 'பந்து’ அப்பாவு கோர்ட்டில்.. திமுக பிளான் என்ன? நெருங்கும் ரிசல்ட்!

 சிவபத்மநாதன்

சிவபத்மநாதன்

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நெல்லை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் பொ.சிவபத்மநாதன். பின்னர் 2020ல் தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆனார் சிவ.பத்மநாபன். இந்நிலையில், மீண்டும் தற்போது தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சிவபத்மநாதன்.

பொறுப்பேற்ற கையோடு

பொறுப்பேற்ற கையோடு

ஏற்கனவே மாவட்ட தி.மு.க செயலாளராக இருந்த சிவ பத்மநாபன், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தி.மு.கவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்காசி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், சிவ பத்மநாபனை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மீண்டும் மா.செவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சிவ பத்மநாபன், பொறுப்பேற்ற கையோடு ஒரு அதிரடி திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறார்.

 தள்ளிப் போட்டார்

தள்ளிப் போட்டார்

தென்காசியில் கலைஞர் அறிவாலயம் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார் சிவ பத்மநாபன். தென்காசி தெற்கு மாவட்ட திமுகவுக்கான அலுவலகத்தை 3 மாடியில் பிரமாண்டமாக அமைக்க வேண்டும் என்பதற்கான வேலைகளில் இறங்கி, நிர்வாகிகளிடம் நிதியும் திரட்டி வந்தார் சிவ பத்பநாபன். இந்நிலையில், திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வந்ததன் காரணமாக, அந்த திட்டத்தை கொஞ்சம் தள்ளிப் போட்டிருந்தார்.

இடம் ரெஜிஸ்டர்

இடம் ரெஜிஸ்டர்

தற்போது, மீண்டும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக தேர்வாகி உள்ளதால், உடனே, அறிவாலயம் கட்டும் வேலையை தீவிரப்படுத்த அதிரடியாக இறங்கி இருக்கிறாராம். தென்காசி தெற்கு மாவட்டம் பாவூர்சத்திரம் கேடிசி நகர் அருகில் கலைஞர் அறிவாலயம் கட்ட திமு கழகத்தின் பெயருக்கு 26 செண்ட் நிலத்தை சிவபத்மநாபன் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உடன்பிறப்புகள் குஷி

உடன்பிறப்புகள் குஷி

சில மாதங்களுக்கு முன்பு நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்திலேயே தென்காசியில் கலைஞர் அறிவாலயம் அமைக்க முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றினர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அழைத்து அடிக்கல் நாட்டவும் முடிவெடுத்தனர். இந்நிலையில், மீண்டும், மா.செ ஆகியிருப்பதால், பணிகளை துரிதப்படுத்தி விரைவில் உதயநிதியை அழைத்து அடிக்கல் நாட்ட சிவபத்மநாபன் திட்டமிட்டுள்ளார் என உற்சாகமாகக் கூறுகிறார்கள் தென்காசி பகுதி உடன்பிறப்புகள்.

English summary
Sivapadmanathan, who has been enthusiastically engaged in work after getting the post as DMK secretary of Tenkasi South District. It has been reported that 26 cent land have been registered for the construction of Kalaignar Arivalayam in Tenkasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X