சென்னை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்- நட்சத்திர ஹோட்டலில் மர்ம பார்சல்... வெடிகுண்டு புரளியால் பரபரப்பு
சென்னை: சென்னை சேத்துப்பட்டு வணிக வளாகம் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் கிடந்த மர்ம பார்சல் மற்றும் கடிதத்தால், வெடிகுண்டு புரளி ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ளது ஷாப்பர்ஸ் ஸ்டாப் என்ற பிரபல வணிக வளாகம். 7 மாடிகளை கொண்ட இந்த வணிக வளாகத்தின் தரைதளத்தில் கழிவறை அருகே நேற்று சிறிய மர்ம பார்சல் ஒன்று கிடந்தது. அதற்குள் அலாரம் அடிக்கும் 2 கடிகாரங்கள் இருந்தன.

அந்தப் பார்சலைக் கண்டெடுத்த காவலாளி கதிரேசன் என்பவர், அதற்குள் இருந்து வந்த சத்தத்தால் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்த உதவி கமிஷனர் மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் மர்ம பார்சலை எடுத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். மோப்பநாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பார்சலை சோதித்துப் பார்த்தனர். ஆனால் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை.
இதற்கிடையே, மர்ம பார்சல் கிடைத்ததைத் தொடர்ந்து வணிக வளாகத்தின் 7 மாடிகளிலும் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அங்கும் சோதனைகள் நடத்தப்பட்டது. அதிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
ஆனால் பார்சலுக்குள் கடிதம் ஒன்று இருப்பதை போலீசார் கண்டனர். அதில், ‘தமிழக சிறைகளில் கைதிகள் தாக்கப்படுகிறார்கள். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவில் கூட மோசடி நடக்கிறது. உதாரணத்திற்கு கோழிக்கறி குழம்பு கைதிகளுக்கு சரியாக வழங்கப்படுவதில்லை. பணம் கொடுக்கும் கைதிகளுக்கு மட்டுமே கோழிக்கறி குழம்புடன் சாப்பாடு கொடுக்கிறார்கள்.
பணம் கொடுக்காத கைதிகளுக்கு, கோழிக்காலை மட்டுமே கொடுக்கிறார்கள். அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் நிறைந்து விட்டது. மாநகராட்சி ஊழியர்கள் குப்பை அள்ளுவதில் கூட லஞ்சம் தலை விரித்தாடுகிறது. இது போன்ற அராஜகம் தடுக்கப்பட வேண்டும்' என்ற வாசகங்கள் காணப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், சென்னை புழல் உள்ளிட்ட 6 மத்திய சிறைகளுக்கு தீவிரவாதி பின்லேடன் படத்துடன் எழுதப்பட்ட மர்ம மிரட்டல் கடிதம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிறைக்கைதிகளின் நலன் குறித்து எழுதப்பட்ட இந்தக் கடிதத்திற்கும், அதற்கும் சம்பந்தம் இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நட்சத்திர ஹோட்டலுக்கும் மிரட்டல்:
இதேபோன்று அலார கடிகார பார்சல் மற்றும் மர்ம கடிதம் சேத்துப்பட்டில் உள்ள ஹாரிசன் நட்சத்திர ஓட்டலிலும் நேற்று கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பார்சலை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் போலீசார் எடுத்துச்சென்று சோதனை நடத்தினர். அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சோதனை போட்டனர்.
சமீபத்தில் இதுபோன்ற அலார கடிகார பார்சல் மற்றும் கைதி எழுதிய கடிதம் சென்னை ஹைகோர்ட் வளாகத்திலும் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வாறு அலார கடிகார பார்சல் மற்றும் கடிதங்கள் கிடைத்து வருவது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications