பணிமனை முன் போராட முயற்சி... மதுரையில் ஊழியர்கள், போலீசிடையே தள்ளுமுள்ளு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் ? போராட்டம் எதனால் ?- வீடியோ

  மதுரை : ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த பணத்தை திரும்பத் தர வலியுறுத்தி மதுரையில் பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

  அடிப்படை ஊதியம், தர ஊதியத்தோடு 2.57 காரணி ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு 2.44 காரணிக்கு மேல் ஊதிய உயர்வு தர முடியாது என்று விடாப்பிடியாக இருப்பதோடு, நீதிமன்ற தீர்ப்பை காட்டி போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று எச்சரித்து வருகிறது.

  Tension turned off at Madurai transport employees protest as Police tried to remove them

  இந்நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணிமனைகள் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையிலும் பணிமனை முன்பு போராட்டம் நடத்த போக்குவரத்துத் தொழிலாளர்கள முயற்சித்தனர்.

  சுமார் 100க்கும் மேற்பட்டோர் கூடி போராடி முடிவு செய்திருந்த நிலையில் அங்கு திரண்ட தொழிலாளர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சித்தனர். இதனால் இரண்டு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரைக்கும் நிலைமை மோசமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Followed by an argument with tranpsort employees in before of Madurai bus depot clashes between employees and police as they try to remove them.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X