For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாதி, மதங்களைக் கடந்த மனிதர்களாய் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வோம்... வேல்முருகன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் இந்நாளில், மனித நேயத்தையும் சுதந்திரமான வாழ்வையும் ஏற்படுத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகம் முழுவதும் வாழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது கிறித்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கும் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் மக்கள் தங்களது வாழ்வுரிமைக்கான அர்ப்பணிப்புடன் கூடிய போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என்பதை கிறித்துமஸ் திருநாள் உறுதிமொழியாக ஏற்போம்.

Thamizhaga Valvurimai Katchi Presdent Velmurugan shares Christmas Greetings

இயேசு பிரான் போதித்த அன்பு, கனிவை கொள்கையாகக் கொண்டிருக்கும் கிறித்துவர்களில் பலர், இந்தத் திருநாளை நிம்மதியாகக் கொண்டாட இயலாத நிலையில் மீன்பிடிக்கப் போன நிலையில் பல்வேறு நாட்டு சிறைகளில் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

இன்னொரு கூட்டம் தங்களுக்காக மட்டுமின்றி, எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு முகாம்களில் உள்ள தமிழர்களும் தங்களது இருள் சூழ்ந்த வாழ்க்கை அகன்று சுதந்திரத்துக்காக ஏங்கி நிற்கின்றனர். இந்திய மண்ணில் சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிற இந்துத்வா சக்திகள் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய அபாயங்களை அச்சுறுத்தல்களை ஜாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழர்களாய், மனிதர்களாய் நின்று எதிர்கொள்வோம்! மனித நேயத்தையும் சுதந்திரமான வாழ்வையும் ஏற்படுத்துவோம் என இந்தத் திருநாளில் கிறித்துவ பெருமக்களுடன் இணைந்து நாமும் உறுதியேற்போம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Thamizhaga Valvurimai Katchi Presdent Velmurugan released a Press statement, In which he shares Christmas wishes to the people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X