பாஜக சார்பில் 5 பேர் கொண்ட குழுவுடன் தூத்துக்குடி பயணம்: தமிழிசை அறிவிப்பு
5 பேர் கொண்ட குழுவுடன் தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜக சார்பில் 5 பேர் கொண்ட குழு தூத்துக்குடியில் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம் என்று தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கலவரம் வரும் என்பதை போலீசார் முன் கூட்டியே அறிந்து தடுக்க தவறி விட்டதாகவும் இதில் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும் போராட்டத்தை தூண்டும் அமைப்புகள், இயக்கங்களை கண்டறிந்து ஒடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் இதுமாதிரி கலவரம் வெடிக்கும் என்றும் அவர் கண்டனமும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாஜக சார்பில் தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறினார். இந்த பயணத்தில் 5 பேர் கொண்ட குழுவுடன் தாம் தூத்துக்குடி செல்ல இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வேதாந்தா குழுமநிறுவன அதிகாரிகள் தன்னை சந்திக்க நேரம் கேட்டதாகவும், ஆனால் தான் நேரம் தர தர மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஸ்டாலின், திருநாவுக்கரசர் தங்கள் மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலளிக்க தான் தயாராக இருப்பதாகவும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications