கருணாஸ் தப்புதான்.. ஆனால் எச். ராஜா, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை.. தனியரசு, அன்சாரி
Recommended Video

சென்னை: கருணாஸ் பேச்சின் சிலவற்றை ஏற்க முடியாது என்று எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எம்எல்ஏ கருணாஸ் பேசினார். அப்போது அவர் காவல்துறை மற்றும் போலீஸாருக்கு எதிராக பேசினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து கருணாஸின் நண்பர்களான எம்எல்ஏக்கள் தனியரசுவும் தமிமுன் அன்சாரியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
அவர்கள் கூறுகையில் எச் ராஜா, எஸ்வி சேகர் ஆகிய இருவர் மீது உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கருணாஸ் பேச்சில் சில பகுதிகள் எந்த விதத்திலும் ஏற்க முடியாதவை.
யாரும் யாரையும் காயப்படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. கருணாஸின் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம், வேதனை அடைந்தோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications