கொட்டும் மழையில் உடல்கள் தகனம்! குன்னூர் விபத்தில் பலியானவர்களுக்கு இரவோடு இரவாக நடந்த இறுதிச்சடங்கு
தென்காசி: குன்னூர் மலைப்பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டிருக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் ஆண்டுதோறும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்காக ஆண்டு தொடக்கத்திலேயே நிதி சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல திட்டமிட்டபடி இந்த ஆண்டு, 28ம் தேதி இரவு கடையத்திலிருந்து 54 பேரை தன்னுடன் சுற்றுலாவுக்குப் அழைத்து சென்றிருக்கிறார். கடையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து கேரள மாநிலம் கொச்சி, அங்கிருந்து ஊட்டி சென்று, கடந்த 30ம் தேதி அதாவது சனிக்கிழமை மாலை கோயம்புத்தூருக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

அப்போது, குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதி 9வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில், பேருந்தில் பயணம் செய்தவர்களில் கடையம் ராமநதி அணைச் சாலையைச் சேர்ந்த சண்முகையா மனைவி பேபிகலா (36). தெற்குக் கடையம் கருப்பசாமி மனைவி தங்கம் (45), கடையம், பாரதிநகர் முருகன் மனைவி ஜெயா (60). ஆழ்வார்குறிச்சி சேனையர் தெரு பண்டாரம் மனைவி முப்பிடாதி (65).வேளார் தெரு சண்முகம் மகன் முருகேசன் (65),கீழக்கடையம் பிச்சைமுத்து மகன் இளங்கோ (64). அவரது மகளும், ராம் என்பவரின் மனைவியுமான கௌசல்யா (29), விக்கிரமசிங்கபுரம் பகுதி அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த விஜய் சுப்பிரமணி மகன் நித்தின்கண்ணா (15), சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த அன்பு மனைவி பத்மா ராணி உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல காயமடைந்தவர்கள் உதகை அரசு மருத்துவமனையிலும், கோவை அரசு மருத்துவமனையிலும் சிக்கிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிந்த குடும்பங்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவியை அறிவித்துள்ளன. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகணம்/நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடையம் பகுதியில் கொட்டும் மழையிலும் 5 பேர் உடல்கள் தகனமும், ஒருவர் உடல் அடக்கமும் செய்யப்பட்டன. ஒரே பகுதியை சேர்ந்த 9 பேர் உயிரிழந்திருப்பது தென்காசி மாவட்டத்தில் பெரும் சோகத்த ஏற்படுத்தியுள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications