மீனவர்களிடையே மோதல்... 2 பேர் அடித்துக்கொலை... 15 பேர் காயம்...
திருவள்ளூர் அருகே மீனவ கிராமத்தில் இருபிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 பேர் அடித்துக்கொல்லப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் வல்லம்பேடு மீனவ கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் அடித்துக்கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வல்லம்பேடு கிராமத்தில் 1500 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் நடக்கும் கோயில் விசேஷங்கள் தொடர்பான கணக்கு வழக்குகளை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சத்திரத்தான் என்பவர் பார்த்து வந்தார். அப்போது கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்பவர் தரப்பு சத்திரத்தான் மீது குற்றம்சாட்டி அவரை பதவியில் இருந்து நீக்கியது.

கணக்கு வழக்குகள் எல்லப்பன் தரப்பைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே முன்பகை இருந்து வருகிறது. சத்திரத்தான் தரப்பினர் ஊரில் நடைபெறும் விசேஷங்களுக்கு ஒத்துழைப்புத் தராமல் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த தீபாவளியன்று இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பொன்னேரி சார் ஆட்சியர் சமரசம் செய்து வைத்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து கிராம மீனவ சங்கத்தினர் இருதரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனமாக போக அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அப்பகுதியில் உள்ள கோவிலிலில் எல்லப்பன் தரப்பினல் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கத்தி அரிவாள், வேல் கம்புடன் அங்குவந்த சத்திரத்தான் தரப்பினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த குணசேகர், தேசப்பன், அண்ணாதுரை உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். 2 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை கைதுசெய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications