பிசாசுகள் குடியேற பேய்கள் வெளியேறுகின்றன!முதல்வர் அலுவலக அதிகாரிகள் விலகல் குறித்து ராமதாஸ் கருத்து
முதல்வர் அலுவலக அதிகாரிகள் திடீரென விலகுவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிசாசுகள் குடியேறுவதற்காக பேய்கள் வெளியேறுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை பிசாசுகள் குடியேற பேய்கள் வெளியேறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். முதல்வர் அலுவலக அதிகாரிகள் திடீரென விலகுவதையடுத்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதல்வர் அலுவலக அதிகாரிகள் பலரும் திடீரென விலகி வருகின்றனர். தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் அண்மையில் தனது பதவிலிருந்து விலகினார்.

இந்நிலையில் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதவியில் இருந்த சாந்த ஷீலா நாயரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுபோல் முதல்வர் அலுவலக அதிகாரிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் திடீரென பதவி விலகி வருவதும் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிசாசுகள் குடியேற பேய்கள் வெளியேறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் அலுவலகம், உளவுத்துறை அதிகாரிகள் விலகல்: செய்தி - பிசாசுகள் குடியேறுவதற்காக பேய்கள் வெளியேறுகின்றன!
— Dr S RAMADOSS (@drramadoss) February 7, 2017
சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மன்னார்குடி கும்பலை பிசாசுகள் என கூறி ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications