சேலம் அருகே ஓடும் பஸில் சிறுமியை பலாத்காரம் செய்த இருவரின் 'லைசன்ஸ்' ரத்து!
சேலம்: ஓமலூர் அருகே ஓடும் பேருந்தில் சிறுதியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
ஓமலூர் அருகே கடந்த 5ஆம் தேதி இரவு தனியார் பேருந்து ஒன்றில் சென்ற சிறுமி அதில் இருந்த 3 ஓட்டுநர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் நாரணபாளையத்தில் இறங்கிய சிறுமி அழுதுக்கொண்டே சென்றார்.

இதனைக் கண்ட அப்பகுதியில் சிறுமியிடம் விசாரித்தனர். அவர் நடந்ததைக் கூறியதையடுத்து பேருந்தை விரட்டிய அப்பகுதி மக்கள் மணிவண்ணன் மற்றும் முருகன் ஆகிய 2 பேரை துரத்திச் சென்று பிடித்தனர்.
பெருமாள் என்பவர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து பொதுமக்களே அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவைப் போல் ஓடும் பேருந்தில் 15வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த காமுகர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மணிவண்ணன் மற்றும் முருகன் ஆகியோரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications