Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெத்த வயிறு பத்தி எரியுது..மண்ணா போயிருவீங்க! கோர்ட்டில் ஆஜரான தாளாளர்.. கதறி அழுத ஸ்ரீமதியின் தாய்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீமதி தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற போது பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் ஆஜராயினர். அப்போது மாணவி ஸ்ரீமதியின் தாயார் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுதது காண்போரைக் கண்கலங்க வைத்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி ஜீலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

The mother of Kallakurichi student Srimathi crying in the court


இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நியமித்து அப்போதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களை கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் ஏராளமானோரை கைது செய்தனர்.

மாணவி ஸ்ரீமதி: இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மாணவி மரணம் குறித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு விதமான சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் வாட்ஸ் அப் குழுக்களை அமைத்து அதில் உறுப்பினர்களை சேர்த்து கலவரத்தை தூண்டும் வகையில் தகவல் மற்றும் கருத்துக்களை பதிவிட்ட நபர்கள், யூட்யூபர்கள், யூட்யூப் சேனல்கள் ஆகியவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வழக்குப் பதிவு:
தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கனியமூர் சக்தி பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் மனு செய்து ஜாமீன் பெற்று வெளியில் வந்தனர்.

குற்றப் பத்திரிகை: இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து 1152 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையானது நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.

காரணம் என்ன?: அதில் மாணவி ஸ்ரீமதின் தற்கொலைக்கான காரணம் எதுவும் இல்லை எனவும் தற்கொலைக்கான முகாந்திரம் மட்டும் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், மேலும் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி மற்றும் ஆசிரியர்களின் தலையீடு இல்லை என சாட்சிகள் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஐந்து பேரும் மாணவியின் இறப்புக்கு காரணம் கிடையாது என சிபிசிஐடி தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

கதறி அழுத தயார்: இதற்கிடையே தமிழ்நாடு முழுவதையும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது பள்ளியின் தாளாளர் , செயலாளர், பள்ளி முதல்வர் ஆகியோர் ஆஜராகினர். அப்போது ஏற்கனவே அங்கு மாணவி ஸ்ரீமதியும் தாயார் காத்துக்கொண்டிருந்தார். பள்ளி நிர்வாகிகளை பார்த்ததும் துக்கம் தாங்காமல் கதறி அழ ஆரம்பித்தார். தொடர்ந்து இதற்காகவா என் பிள்ளையை பெற்று வளர்த்தேன் என மார்பில் அடித்துக் கொண்டு கதறி அழுதார். இந்த காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+