பற்ற வைத்த நெருப்பு! தீவிரமான கள்ளக்குறிச்சி கலவர வழக்கு! "முக்கிய குற்றவாளி" கைது!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்ட பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் காவல்துறையினரின் பேருந்துக்கு முதன் முதலில் தீ வைத்த நபர் அடையாளம் காணப்பட்டு அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது.
பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடினர். மேலும் பள்ளியின் வாகனத்தை தீயிட்டு எரித்தனர். குறிப்பாக காவல்துறையினர் தாக்கப்பட்டதோடு, காவல் வாகனமும் எரிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி கலவரம்
மேலும் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக 32 வகையான வதந்தி செய்திகள் பரப்பப்பட்டது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எத்தனை வலைத்தள பக்கங்கள் வதந்தி செய்தியைப் பரப்பியுள்ளன என்பது குறித்து கணக்கெடுத்த பிறகு, அந்த பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யும் பணி
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், யூ டியூப் போன்ற சமூக வலைத்தளங்களை தனிப்படை காவல்துறையினர் கண்காணித்து வருகிறது. இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியும் தீவிரமாகி வருகிறது. கலவரம் நடந்த அடுத்த நாளே பலர் கைது செய்யப்பட்ட நிலையில், கூடுதல் போலீசார் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டபோது முதன் முதலில் தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலில் தீ வைத்தவர்
கலவரம் தொடங்கிய நிலையில் பள்ளி பேருந்துகள் சேதப்படுத்தி எரிக்கப்பட்ட நிலையில் வெளியே வந்த கலவரக்காரர்கள் காவல்துறையின் வாகனத்திற்கும் தீ வைத்தனர் இந்த வீடியோவை கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர் இது தொடர்பாக சைபர் கிரைப் போலீசார்டன் இணைந்து விசாரணை நடத்தியதில் காவல் வாகனத்துக்கு முதன் முதலில் தீயை வைத்தவர் சின்னசேலம் அருகேயுள்ள பூசுப்பாடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

அதிரடி கைது
இதனை அடுத்து அவரை அதிரடியாக கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது வரை கலவரத்திற்கு காரணமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ளவர்களையும் அடையாளம் காணும் பணியானது நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் கலவரத்திற்கு பின்னரும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications