சென்னை தனியார் பள்ளியில் மாணவர் உயிரிழந்த விவகாரம்.. உடற்கல்வி ஆசிரியர் கைது!

சென்னை பெரம்பூர் தனியார் பள்ளியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரம்பூர் தனியார் பள்ளியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் நரேந்தர். நேற்று பள்ளிக்கு தாமதமாக வந்ததால் உடற்கல்வி ஆசிரியர் வாத்து போல் நடக்க சொல்லி தண்டனை கொடுத்தாக தெரிகிறது.

The private school physical eduacation teacher has been arrested in Chennai Perambur

வாத்து போல் நடந்துகொண்டிருந்த போது திடீரென மாணவன் நரேந்தர் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு மாணவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

அப்போது மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவன் இயற்கை மரணம் அடைந்ததாக மருத்துவமனையிடமிருந்து எழுதி வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,

மாணவன் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்கை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+