தீபா வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுக்கு இதுதான் காரணமாம்!
சரியான முறையில் பூர்த்தி செய்யாததால் ஜெ.தீபாவின் வேட்புமனு தேர்தல் ஆணைய அதிகாரிகளால் நிராகரிப்பட்டு உள்ளது.
Recommended Video

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த ஜெ.தீபாவின் வேட்புமனுவில் சரியான தகவல்கள் இல்லாததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனுவின் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், நாம்தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம், டிடிவி தினகரன் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

தீபாவின் மனு இன்று நிராகரிக்கப்பட்டது. போதிய தகவல்களை வேட்புமனுவில் குறிப்பிடாததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஜெ.தீபாவின் மனுவினை ஏற்கக்கூடாது என்று அ.தி.மு.க.,வைச் சார்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளித்து இருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையத்திடம் தீபா அளித்திருந்த வேட்புமனுவில் பல குளறுபடிகள் இருந்தன. அதிலும் சொத்து மதிப்பு, வழக்கு விபரங்கள், திருமணம் குறித்த தனிப்பட்ட தரவுகளை நிரப்பவேண்டிய இடத்தில் கூட அவர் சரியாக எந்த தகவலையும் நிரப்பவில்லை. தனது கணவர் மாதவனின் பெயரைக் கூட சரியாக குறிப்பிடாமல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
முக்கிய பிரமாணப் பத்திரமான படிவம் 26ல் இருக்கும் மொத்தம் 14 பக்கத்தில் ஒரு பக்கத்தைக் கூட அவர் நிரப்பவில்லை. அது தான் முக்கியமானது. அதையே நிரப்பாததால் நானும், சில சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் அதிகாரிக்கு இது குறித்து புகார் அளித்து இருந்தோம். அதனடிப்படையில், தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications