For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும்.. அதிகாரிகள் உறுதி

பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்படும் 400 கனஅடி தண்ணீர் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு வினாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனை உடனடியாக நிறுத்தக்கோரி பொள்ளாச்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The water from the Aliyar dam to Kerala will stop: authorities

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட உழவர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கேரளாவுக்கு திறக்கப்படும் நீரால் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக கேரளாவுக்கு அளிக்கப்படும் நீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் முறையிட்டனர். விவசாயிகள் முறையீட்டை ஏற்ற அதிகாரிகள் கேரளாவுக்கு ஆழியாறு அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி வீதம் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் என உறுதி தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் இந்த உறுதியால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் போராட்டத்தையும் கைவிட்டுள்ளனர்.

English summary
The water from the Aliyar dam to Kerala would be stopped says authorities to farmers. Pollachi farmers have been conducted protest against to give water Kerala from Aliyaru dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X