கப்பல் கட்ட போறேன், உலகம் அழிய போகுது! கிழிந்த கோணிப்பை கானா நாட்டு தீர்க்கதரிசியிடம் ஓடும் மக்கள்
சென்னை: ஒவ்வொரு வருட முடிவிலும், உலகம் அழியப்போகிறது என்று செய்திகளும், கணிப்புகளும், முன்னறிவிப்புகளும் வெளிவருவது இயல்பாகும்.. அதிலும் சில தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி விடும்.. அந்தவகையில், தற்போது கானா நாட்டு தீர்க்கதரிசி ஒருவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, உலகின் கவனத்தை பெற்ற வருகிறது. அது என்ன?
கானா நாட்டை சேர்ந்தவர் எபோ நோவா.. சில சமயங்களில் இவர் சொல்லும் விஷயங்கள் கிட்டத்தட்ட நடந்துள்ளன.. அதாவது ஏறக்குறைய அவர் சொல்வது நடப்பதால் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக அறிவித்து கொண்டார்.. இதனால் இவருக்கென தனி சீடர்கள் கூட்டம் உள்ளது..

கானா கிழிந்த கோணிப்பை தீர்க்கதரிசி
எபோ ஜீசஸ் என்ற பெயரை எபோ நோவா என்று மாற்றி கொண்டுள்ளார்.. இவருக்கு 30 வயதாகிறது.. இன்று கிறிஸ்துமஸ் என்பதால் முக்கிய அறிவிப்பு ஒன்றை இணையத்தில் அறிவித்து, மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். எபோ சில வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
அதில், சாக்கு துணியில் செய்யப்பட்ட ஆடையை அணிந்துள்ளார் எபோ.. அந்த சாக்கு துணி, கிழிந்து தொங்கும் நிலையில் காணப்படுகிறது.. தான் உண்ணாவிரதம் இருப்பதையும், பிரார்த்தனை செய்வதையும், கயிறு உடை அணிவதையும் எபோ அந்த வீடியோக்களில் வெளிப்படுத்தி உள்ளார்..
கப்பல் கட்டும் எபோ - உலகம் அழிகிறது
மேலும் எபோ வீடியோவில் பேசும்போது, "டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்.. ஒரு பெரிய வெள்ளம் வரும்.,.. இந்த வெள்ளம் மூன்று ஆண்டுகள் தொடரும்.. அதன் மூலம் உலகம் முடிவுக்கு வரும். அதனை கடவுள் செய்வார்..
அதனால் பைபிளில் வரும் நோவாவின் கதை போல, நானும் பேழைகளை அதாவது கப்பல்களை கட்ட போகிறேன்.. அந்த கப்பல்களில் இந்த உலக மக்களை காக்க போகிறேன்... நாங்கள் கடவுளின் இரக்கத்திற்காக வேண்டி கொள்கிறோம். ஆனால், கடவுள் அமைதியாக இருந்து வருகிறார். "நிறுத்து" என்று அவருடைய குரல் கேட்கும் வரை இந்த கப்பலை கட்டி கொண்டிருப்பேன். இறைவழிபாட்டுடன் எனக்கு ஆதரவு அளியுங்கள்" என்று எபோ கூறுகிறார்.
வெள்ளம் - பேழை
எபோ வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், கப்பல்கள் கட்டும் விதம், கப்பலில் வாழ்வது, பசுக்கள், உணவு பொருட்கள் போன்றவை காணப்படுகின்றன.. அத்துடன் பேழைகளை அதாவது கப்பல்களை தயாரிக்கும் பணியிலும் எபோ நிஜமாகவே ஈடுபட்டு வருவது பதிவாகி உள்ளது.. இந்த பேழைகள் 3 வருடங்கள் வரை வெள்ளத்தில் இருந்து காக்கும் வகையில் கட்டப்பட்டு வருகின்றன..
எபோவின் இந்த அறிவிப்பை பார்த்ததுமே பலரும் ஆச்சரியப்பட்டு அவருக்கு ஆதரவு தந்து வருகிறார்கள்.. மேலும் பலர், தங்களுடைய சொத்துகளை எல்லாம் விற்று அதில் கிடைத்த தொகையை அவருக்கு கொடுத்து உதவி வருகிறார்கள்.. இதுதான் உலக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
இணையவாசிகள் கமெண்ட்ஸ்
இதுகுறித்து இணையவாசிகள் பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. "இந்த கப்பல்கள் பார்ப்பதற்கு சிறியதாக உள்ளன.. ஆனால் பைபிளில் வரும் நோவாவின் கப்பல் மிக பெரியதாக இருந்தது. அது 510 அடி நீளமும், 85 அடி அகலமும், 51 அடி உயரமும் இருந்தது.
இந்தக் கப்பல்கள் உண்மையில், மிகப்பெரிய வெள்ளத்தை தாங்க முடியாது. உலகில் எந்தெந்த இடங்களில் மழை பெய்யும் என்று எந்த வானிலை அறிவிப்பும் இதுவரை வரவில்லை..
மீண்டும் வெள்ளத்தால் உலவகை கடவுள் அழிக்க மாட்டார் என்று பைபிளில் உள்ளது.. எனவே இப்படி கப்பல்கள் கட்டுவதற்கு பதிலாக, இந்த பணத்தை மக்களுக்கு உணவு, குடியிருப்பு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம்" என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications