மக்கள் தலையில் "டிக்கெட் குண்டு".. தூக்கி வீசும் தியேட்டர்கள்.. சாட்டையை வீசுமா அரசு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையரங்குகள் இரட்டை வரிக்கேற்ப கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. இந்த கட்டண உயர்வு மக்கள் தலையில்தான் விடியும் என்பதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேசம் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் திரையரங்குகளுக்கு மட்டும் ஜிஎஸ்டியுடன் கேளிக்கை வரியையும் சேர்த்து இரட்டை வரி முறை விதித்தது.

ஏற்கனவே 100 ரூபாய்க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீதமும் 100 ரூபாய்க்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 28 சதவீதமும் ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் கேளிக்கை வரியும் சேர்ந்தால் நஷ்டம் தான் ஏற்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஸ்ட்ரைக் வாபஸ்

ஸ்ட்ரைக் வாபஸ்

கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி கடந்த 4 நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அரசுடன் பேச்சு வார்த்தை திரையரங்கு வர்த்தக சபை குழுவினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

டிக்கெட் விலை உயர்வு

டிக்கெட் விலை உயர்வு

அதேநேரத்தில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதன்மூலம் நாளை முதல் ஜிஎஸ்டியுடன் சினிமா டிக்கெட் விலை ரூ153.60 வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் கட்டணம்

பார்க்கிங் கட்டணம்

தங்களின் நஷ்டத்தை சமாளிக்க மொத்த சுமையையும் மக்கள் தலையில் இறக்கி வைக்க தியேட்டர்கள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே கட்டுப்பாடின்றி பார்க்கிங் கட்டணம் மற்றும் ஸ்னாக்ஸ்களுக்கு கன்னாபின்னாவென வசூலிக்கும் திரையரங்குகள் தற்போது டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.

நோ ரிலாக்ஸ்

நோ ரிலாக்ஸ்

தங்களை பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள மக்களை இழுத்துவிட்டுள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள். இதனால் பொதுமக்கள் தற்போது ரிலாக்ஸ் செய்துகொள்ள தியேட்டருக்கும் போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு தலையிடுமா?

அரசு தலையிடுமா?

மக்களை பாதிக்கும் இப்பிரச்சனையை அரசு கண்டுகொள்ளுமா என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் தனியார் மால்களில் பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Theaters has increased the ticket cost. Due to this public will be affcted. public demanding to take action on cinema tickets issue.
Please Wait while comments are loading...