தீரன் பட பாணியில் தமிழகத்தில் சம்பவம்.. சீறிப் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்.. நகை, பணம் கொள்ளை
தீரன் திரைப்பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அரக்கோணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை : தீரன் திரைப்பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அரக்கோணம் அருகே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் கொள்ளையர்கள் சுட்டதில் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் தனியாக இருக்கும் வீடுகளைக் குறி வைத்து வட மாநில கொள்ளையர்கள் நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு வீட்டு உரிமையாளர்களை கொலை செய்து விடுவார்கள்.
கொள்ளையர்கள் படு பயங்கரமான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு நகை பணத்தை கொள்ளையடித்துச் செல்வது வழக்கம். அவர்களின் கொள்ளை பாணியே படு பயங்கரமாக இருக்கும். அது போன்ற ஒரு கொள்ளைச் சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நிகழ்ந்துள்ளது.

கொள்ளையர்கள்
அரக்கோணத்தை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் புஷ்கரன் என்பரின் வீட்டில்தான் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. புஷ்கரன் தனது தாய், பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார். வெள்ளிக்கிழமையன்று அவரது வீட்டை மர்ம நபர்கள் சிலர் வேகமாக தட்டியுள்ளனர்.

கதவை உடைக்க போராட்டம்
பயந்து போன புஷ்கரன் கதவைத் திறக்காமல் யார் என்று கேட்டுள்ளார். அப்போது பதில் அளிக்காத மர்ம நபர்கள் கதவை அரிவாளால் வெட்டி உடைக்க முயன்றுள்ளனர். சுதாரித்துக்கொண்ட புஷ்கரனும் தாயாரும் கதவை திறக்க மறுத்துள்ளனர்.

படுகாயம்
கதவை உடைக்க முடியாமல் போகவே மர்ம நபர் ஒருவர் கதவு வழியாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் அதில் வீட்டில் இருந்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி
கொள்ளை குறித்து உடனடியாக காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளையர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திரைப்பட பாணியில் தனியாக இருந்த வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அரக்கோணம் அருகே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications