அன்று மூப்பனார்.. இன்று அண்ணாமலை.. கூட்டணிக்காக மாநில தலைவர்களை பலி ஆடுகளாக்கும் தேசிய கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாநிலங்களில் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்பதற்காகவே தேசிய கட்சிகள் எப்போதும் மாநிலங்களில் சொந்த கட்சித் தலைவர்களை தூக்கி அடிப்பது வரலாறாகவே உள்ளது.

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை எப்போதும் மாநில கட்சித் தலைமைகளை 'ஆட்டுவிப்பதில்'தான் தீவிரமாக இருப்பர். மாநிலங்களின் கள நிலவரம் தொடர்பாக மாநில கட்சித் தலைமைகள் முன்வைக்கும் கருத்துகளை பரிசீலனை செய்வது என்பது எல்லாம் எந்த ஒரு தேசிய கட்சிக்கும் 'உவப்பானது' அல்லவும்தான்.

ஒருங்கிணைந்த அதிமுக

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக பிளவுபட்டிருந்தது. 1989-ல் திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா திமுக படுதோல்வி அடைந்து சரியான பாடம் கற்றுக் கொண்டது. இதனால் பிரிந்த அண்ணா திமுக அணிகள் மீண்டும் ஒன்றிணைந்தன. அப்போது தமிழக அரசியல் களத்தில் திமுக, காங்கிரஸுக்கு எதிரான தேசிய முன்னணி கூட்டணியில் இருந்தது. காங்கிரஸ் தனித்துதான் இருந்தது.

அதிமுக- காங்கிரஸ்- மூப்பனார்

1990-ம் ஆண்டு ஜெயலலிதாவின் கார் விபத்துக்குள்ளான போது, யாருமே எதிர்பாராத திருப்பமாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நேரில் வந்து ஜெயலலிதாவை நலம் விசாரித்தார். அப்போது அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அத்தியாயம் தொடங்கியது. ஆனாலும் ஜிகே மூப்பனாருக்கு இந்த கூட்டணியில் விருப்பம் இல்லை. இதனால் ஜிகே மூப்பனாருக்கு எதிராகவே ஜெயலலிதா இருந்தார்.

ஜிகே மூப்பனாருக்கு பதில் வாழப்பாடி ராமமூர்த்தி

1991 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ஜிகே மூப்பனார் ஓரம்கட்டப்பட்டு வாழப்பாடி ராமமூர்த்தி தலைவராக் முன்னிறுத்தப்பட்டார். 1991-ம் ஆண்டு சட்டசபை, லோக்சபா தேர்தல் இணைந்தே நடைபெற்றது. சடசபை தேர்தலில் காங்கிரஸுக்கு 60 இடங்களை அதிமுக ஒதுக்கியது. ஆனால் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு 28 இடங்களை தூக்கி கொடுத்தது அதிமுக. ஆம் அண்ணா திமுக வெறும் 11 இடங்களில்தான் போட்டியிட்டது ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்த அந்த தேர்தலில் சட்டசபை, லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

அந்த தேர்தலில் அதிமுக தலைமையுடன் இணக்கமான பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே ஜிகே மூப்பனார் மாற்றப்பட்டு வாழப்பாடி ராமமூர்த்தியை தலைவராக்கியது டெல்லி காங்கிரஸ் மேலிடம். அதன் பலனையும் அறுவடை செய்தது.

தமிழக அரசியல் களம்

தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழலும் 1991-ஐ போலவே இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. அதிமுக- பாஜக தனித்து நிற்கின்றன. பாஜக கூட்டணிக்குள் அதிமுகவை கொண்டு வரும் முயற்சிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.

அண்ணாமலைக்கு அதிமுக எதிர்ப்பு

ஆனால் அதிமுக தலைமையோ, தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை இந்த கூட்டணி சாத்தியமாகாது என்கிற கருத்தை டெல்லியிடம் தெரிவித்துவிட்டது. டெல்லியும் அண்ணாமலையை வரவழைத்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்குப் பின்னர் சென்னை திரும்பிய அண்ணாமலையின் பேட்டி மூலம், அவரது மாநில தலைவர் பதவி பறிக்கப்படுவது உறுதியானது. பாஜகவின் சாதாரண தொண்டராகவும் இருக்க தயார் என டெல்லியிடம் கூறிவிட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையை அதிமுக எதிர்ப்பது ஏன்?

அண்ணாமலையால்தான் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. அண்ணாமலையை தலைவராக வைத்துக் கொண்டு அதிமுக தலைமையால் கூட்டணிப் பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்த முடியாது என்பது தெளிவான ஒன்று. ஏனெனில் அதிமுகவும் பாஜகவும் மேற்கு மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டவை. இதனால் இரு கட்சிகளுமே கணிசமான தொகுதிகளை மேற்கு மண்டலத்தில் பெறுவதற்கு முனைப்பு காட்டும். அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்; ஒரே ஜாதியையும் சேர்ந்தவர்கள். இவர்களிடையே ஏற்கனவே இணக்கம் இல்லாமல் போனதாலேயே கூட்டணி முறிந்தது. இருவரது தலைமையில் மீண்டும் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை எல்லாம், கூட்டணியை முறிக்கத்தான் செய்யும் என்பதுதான் பொதுவான கருத்து. இதனையே டெல்லி தலைமைக்கும் அதிமுக தலைமை சுட்டிக்காட்டியது. இதனால்தான் அண்ணாமலையை, அதிமுக கூட்டணிக்காக பலியாடாக்குகிறது டெல்லி பாஜக தலைமை.

நயினார் நாகேந்திரனை விரும்பும் அதிமுக

அண்ணாமலைக்குப் பதிலாக, அதிமுகவுடன் இணக்கமாக இருக்கக் கூடியவராக பார்க்கப்படுகிற நயினார் நாகேந்திரன், புதிய பாஜக தலைவராக்கப்படக் கூடும் என தெரிகிறது. நயினார் நாகேந்திரன், ஏற்கனவே அதிமுகவில் அமைச்சராகவும் பணியாற்றியவர்; அதிமுக தலைவர்கள் அனைவருடனும் இணக்கமாக இருக்கும் நயினார் நாகேந்திரனையே டெல்லியும் தங்களது சாய்ஸாக வைத்திருக்கிறது. என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

பலி ஆடுகளாக மூப்பனார்.. அண்ணாமலை

அன்றைக்கு மூப்பனாரை தூக்கியடித்து வாழப்பாடி ராமமூர்த்தியை அதிமுக கூட்டணிக்காக களமிறக்கியது டெல்லி காங்கிரஸ் மேலிடம். இன்று அண்ணாமலையை தூக்கியடித்து நயினார் நாகேந்திரனை அதிமுக கூட்டணிக்காக களமிறக்கப் போகிறது டெல்லி பாஜக மேலிடம்!

Take a Poll


ராஜீவ் காந்தி படுகொலை எப்பொழுது நிகழ்ந்தது?

1991

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+