ஆட்டோவும் தனியார் பஸ்ஸும் மோதிக்கொண்டதில்4 பேர் பலியான பரிதாபம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தேனியில் இருந்து பெரியகுளம் சாலையில் சென்ற ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி, 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 8 பேர் பயணம் செய்தனர். அப்போது எதிர்புறத்தில் வேகமாக வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் அதே இடத்தில் இரண்டு பேர் பலியானார்கள்.

 In Theni -Periyakulam main road auto and private bus directly hit on

பலத்த காயமடைந்த 6 பேரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இருவர் பலியாகினர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ, வேன்களில் அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றுவதும் விபத்து ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அமைகிறது என்பதால் போலீசார் இந்த விஷயத்தில் விதிகளை பின்பற்ற ஓட்டுநர்களை வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Theni -Periyakulam main road auto and private bus directly hit on and 4 of the travelers who traveled in auto died.
Please Wait while comments are loading...