குன்னூர் பேருந்து விபத்துக்கு இதுதான் காரணமா? டிரைவர்களே மறந்தும் மலைப்பாதையில் இதை செய்யாதீங்க
குன்னூர்: குன்னூரில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மலைப்பாதையில் ஓட்டுநர்கள் செய்யக்கூடாத விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் ஆண்டுதோறும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்காக ஆண்டு தொடக்கத்திலேயே நிதி சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல திட்டமிட்டபடி இந்த ஆண்டு, 28ம் தேதி இரவு கடையத்திலிருந்து 54 பேரை தன்னுடன் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றிருக்கிறார். கடையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து கேரள மாநிலம் கொச்சி, அங்கிருந்து ஊட்டி சென்று, கடந்த 30ம் தேதி அதாவது சனிக்கிழமை மாலை கோயம்புத்தூருக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

அப்போது, குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதி 9வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில், 9 பேர் உயிரிழந்தனர். அதேபோல காயமடைந்தவர்கள் உதகை அரசு மருத்துவமனையிலும், கோவை அரசு மருத்துவமனையிலும் சிக்கிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவியை அறிவித்துள்ளன.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகணம்/நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடையம் பகுதியில் கொட்டும் மழையிலும் 5 பேர் உடல்கள் தகனமும், ஒருவர் உடல் அடக்கமும் செய்யப்பட்டன. ஒரே பகுதியை சேர்ந்த 9 பேர் உயிரிழந்திருப்பது தென்காசி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மலைப்பாதையில் ஓட்டுநர்கள் செய்யக்கூடாத விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பொதுவாக குன்னூர் போன்ற மலை பகுதியில் சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் சமதளத்தில் வாகனத்தை ஓட்டி பழகியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மலை இறக்கத்தில் வாகனத்தை இயக்குவது குறித்த போதிய அனுபவம் இல்லாமல் இருந்திருக்கும். எனவேதான் விபத்துக்கள் ஏற்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதாவது வழக்கமாக மலை பாதையின் சரிவில் புவிஈர்ப்பு விசை காரணமாக வாகனங்கள் வேகமாக கீழ்நோக்கி வரும் இந்த நேரத்தில் கார், பஸ் ஓட்டுநர்கள் அடிக்கடி பிரேக்கை பயன்படுத்துவார்கள். இதனால் வண்டியின் வீல் டிரம் (wheel drum) சூடாகிவிடும். இது அளவுக்கு மீறி சூடானால் பிரேக் பிடிக்காது.
இதன் காரணமாக வீல் டிரம் (wheel drum) அதிகமாக சூடாகி ஒரு கட்டத்தில் பிரேக் பிடிக்காமல் போயிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதுவே விபத்திற்கு பிரதான காரணமாகும். காவல்துறையினரும், பேருந்து பிரேக் பிடிக்காமல் போனதால்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளனர். எனவே மலை பாதையில் இறக்கத்தில் வாகனத்தை இயக்குபவர்கள், கீழே இறங்குவதற்கு முன்னர் வாகனத்தின் வீல் டிரம் (wheel drum) சூடாக இருக்கிறதா? என்பதை செக் செய்துக்கொள்ளவும். அப்படி இருப்பின் சூடு தனியும் வரை காத்திருக்கவும்.
அதேபோல இரண்டாவது கியரில் மட்டுமே வாகனத்தை இயக்கும் போது எளிதில் கன்ட்ரோல் கிடைத்துவிடும். எனவே விபத்து நடப்பதற்கான வாய்ப்பு குறைவு என மலைப்பகுதியில் வாகனத்தை ஓட்டுபவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் 2வது கியரில் வாகனத்தை இயக்கும்போது அதன் வேகம் 40 அல்லது 45ஐ தாண்டாது. எனவே Hairpin bend எனப்படும் கொண்டை ஊசி வளைவுகளில் பிரேக்கை லைட்டாக பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். இதனால் வீல் டிரம் அதிகமாக சூடாகாது. பிரேக்கும் ஃபெய்லியர் ஆகாது என்றும் மலை பாதையில் இறக்கத்தில் வாகனத்தை இயக்குபவர்கள் கூறியுள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications